உழவு இயந்திரம் மற்றும் லான் மாஸ்ரர்கள் அவற்றின் பெட்டிகளுக்கு இரவில் உழவு இயந்திரம் மற்றும் லான் மாஸ்ரர்கள் இரவில் தெரியக்கூடிய வகையில் வெளிச்சம் பொருத்தப்பட வேண்டும்(காணொளி)

298 0

paramsothiஉழவு இயந்திரம் மற்றும் லான் மாஸ்ரர்கள் இரவில் செலுத்தப்படும் போது அவற்றின் பெட்டிகளுக்கு இரவில் தெரியக்கூடிய வகையில் வெளிச்சம் பொருத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர்அரியகுட்டி பரஞ்சோதி தெரிவித்தார்.

நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் பொது மக்கள் பாதகாப்புக்குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற போது இக்கருத்தை nவிளியிட்டார்.

இரவில் லான்மாஸ்ரர் மற்றும் உழவு இயந்திரப் பெட்டிகளின் பின்புறத்தில் ஒளிரக்கூடிய ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும் என்று தெரிவித்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் அரியகுட்டி பரஞ்சோதி இதனை பொலிஸார் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பொலிஸ் அதிகாரி மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக முன்னைய கூட்டத்தில் தெரிவத்த போதும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை லான்மாஸ்ரர் மற்றும் உழவு இயந்திரப் பெட்டிகளின் பின்புறத்தில் ஒளிரக்கூடிய ஸ்ரிக்கர்களையாவது ஒட்டுவதற்கு ஊடகங்களுடாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அரசாங்க அதிபர் தெரிவித்தார்.