யாழில் கோலகலமாக ஆரம்பமாகியது 42 ஆவது தேசிய விளையாட்டு விழா (படங்கள் இணைப்பு)

335 0

14520331_1751976764829912_8866308659481661221_n42 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் முதற்­த­ட­வை­யாக கோலா­க­ல­மாக ஆரம்பமாகியது. இன்றைய தினம் ஆரம்பமாகிய தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் 2 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது
ஆரம்ப நிகழ்வு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவின் தலை­மையில் இன்று பிற்­பகல் 3 மணிக்கு ஆரம்பமாகியது..
இவ்­ ஆரம்ப நிகழ்வில் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம், விளை­யாட்­டுத்­துறை பிர­தி­ய­மைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இலங்கையின் முன்னாள் தடகள வீராங்கணை சுசந்திகா ஜயசிங்க உட்­பட முன்னாள் இந்நாள் வீரர்கள் எனப் பலர் கலந்து கொண்டர்.
மேலும் நிகழ்வில் வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் நிகழ்வில் பங்கேற்கவில்லை.
ஒலிம்பிக் தீபத்தினை இலங்­கையின் முன்னாள் கால்­பந்­தாட்ட வீர­ரான சூசைப்­பிள்ளை அந்­த­னிப்­பிள்ளை க்ளிபர்ட்டுக்கும் வலைப்­பந்­தாட்ட அணியின் முன்னாள் தலைவி ஜெயந்தி சோம­சே­கரம் டி சில்­வா­வும் ஏற்றி வைத்தனர்.
தேசிய விளையாட்டு விழாவானது இந்த வருடம் முதல் முறையாக வடமாகாணத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிறைவு விழா எதிர்வரும் 2 ஆம் திகதி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள தேசிய விளை­யாட்டு விழா எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் ஆகியோர் பங்­கேற்­கின்­றமை குறிப்­பி­டத்தக்கது.

14462849_1751976868163235_3565867338915174515_n 14502890_1751976961496559_8499337863972040871_n