Breaking News
Home / தமிழீழம் (page 3)

தமிழீழம்

திருகோணமலையில் சட்டதரணிகள் ஆர்ப்பாட்டம்

அண்மையில் வேலையில்லா பட்டதாரிகளின் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவு புறக்கணிக்கப்பட்டதாக தெரிவித்து, இன்று சட்டதரணிகள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். கடந்த 24ஆம் திகதி வேலையில்லா பட்டதாரிகள், கிழக்கு மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டமானது பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காகவாறும் அமைதியான முறையிலும் நடத்தப்படவேண்டும் என திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் ஆர்ப்பாட்டகாரர்கள் குறித்த உத்தரவை அவமதித்து செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. …

Read More »

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் இன்று 28-04-2017 முதல் பணி பகிஸ்கரிப்பில்

கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின்  நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். செயலாளர் சாதி பெயர்களை குறிப்பிட்டு  தகாத வார்த்தைகளை பேசி அவமானப் படுத்தி வருவாதகவும் தொடர்ந்தும் பழிவாங்கும் நோக்கோடு நடந்துகொள்வதாகவும் பழிவாங்கும் நோக்கோடு பணியாளர் ஒருவரை  பணியில் இருந்து  நிறுத்தியுள்ளார் என்றும். சாதியை சொல்லி பேசிய செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை முன் வைத்து இன்று  காலை  முதல்  பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். கடந்த …

Read More »

லைக்கா நிறுவனத்தினால் கட்டப்பட்ட வீடுகளில் குடியேற முடியாது!

லைக்கா நிறுவனத்தினால் சின்ன அடம்பனில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளில் குடியேற முடியாது என பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் உள்ள 97 குடும்பங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றவர்கள் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்

தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ்செயற்பட வேண்டுமென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் ஊடகவியலாளர் தராகியின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தயாராக இருக்கின்றதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

Read More »

52 ஆவது நாளாக வீதியோரத்தில் தொடரும் மக்கள் அவலம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து போராடிவருகின்ற  காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி இன்று 52  ஆவது நாளாக இந்த வீதி ஓரத்தில் போராடிவருகின்றனர். ஆனால் இந்த அரசாங்கமானது எமக்கு எந்தவித தீர்வுகளையும் முன்வைக்காத நிலையில் இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. நேற்றயதினம் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்ட மக்கள்  ஜனாதிபதி பிரதமர் எதிக்கட்சிதலைவர் வடமாகான முதலமைச்சர்   மாவட்ட அரச அதிபர்  ஆகியோருக்கு தமக்கு விரைவில்  தீர்வை  வழங்குமாறு …

Read More »

வவுனியாவில் 64 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் 64 ஆவது நாளாகவும் இன்று (28) தொடர்கிறது. குறித்த போராட்டம் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவினர்கள் தொடர்பில் பதிலளிக்க கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரியும் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், சாதகமான பதில் கிடைக்கும் வரையில் தங்களது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Read More »

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 68 வது நாளாக தொடர்கிறது

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை     அறுபத்திஎட்டாவது      நாளாக  தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த மாதம் 20-02-2017  அன்று   காலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக  தொடர்கிறது.

Read More »

பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 4 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் மே 12 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

Read More »

சட்டவிரோதமாக கடல் மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர் கைது!

பருத்தித்துறை – வல்லிபுரம் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக கடல் மணல் அகழ்வில் ஈடுபட்ட நபரொருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபரை கடற்படையினர் நேற்று கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் அனுமதிப்பித்திரமின்றி கடல் மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபர் மற்றும் அவர்பயன்படுத்திய பாரவூர்தி என்பன மேலதிக நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

Read More »

காங்கேசன்துறையில் கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதேசத்தில் கேரள கஞ்சா 4 கிலோ கிராமுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் உந்துருளியில் கஞ்சாவை கொண்டு சென்றுள்ள போதே நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் பளை பிரதேசத்தை சேர்ந்தவருடன், அவர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read More »
http://www.themesfreedownloader.com latest government jobs stock market tutorial