நிலையவள்

மின்னல் தாக்கி ஒருவர் பலி

Posted by - October 10, 2019
காவத்தை – ஓபநாயக்க பகுதியில் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். ஓபநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடியாவத்த – அக்கரெல்ல பகுதியில் புதன்கிழமை நபரொருவர் மின்னல் தாக்குதலுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பத்தின் போது…
மேலும்

பொலிசாருக்கு இலஞ்சம் கொடுத்த நபர் ஒருவர் கைது

Posted by - October 10, 2019
தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் உள்ளே வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. தம்புள்ள நீதிமன்றத்தில் நடைபெறும் ஹெரோயின் தொடர்பான வழக்கை குறுகிய காலத்தில் முடித்து கொள்ள உதவி புரியும்…
மேலும்

ராஜபக்ஷக்கள் எவர் வந்தாலும் நவம்பர் 17 இல் சஜித் வெல்வது உறுதி-ராஜித

Posted by - October 10, 2019
ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷக்கள் எவர் வந்தாலும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவதை எவராலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன ரணிலை பிரதமர் ஆக்கிய எங்களுக்கு சஜித்தை ஜனாதிபதியாக்குவது பெரிய காரியமல்ல என்று தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனதிபதி…
மேலும்

கைதிகளுக்குக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரி மனுத்தாக்கல்!

Posted by - October 10, 2019
ஜனாதிபதி தேர்தலில் சிறைக் கைதிகளுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்க உத்தரவிடுமாறு கோரி மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய உள்ளிட்ட…
மேலும்

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரக்கூட்டம் கொழும்பில்!

Posted by - October 10, 2019
முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மாநாடும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டமும் கொழும்பில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவ…
மேலும்

இலங்கை பொறியியல் நிறுவனத்தின் ஊடாக மாலைத்தீவுக்கான சிங்கப்பூர் விமான சேவை உறுதி

Posted by - October 10, 2019
இலங்கை பொறியியல் நிறுவனம் முதலாவது சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போஜிங் 737 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிப்பதை உறுதி செய்துள்ளது. இலங்கை பொறியியல் நிறுவனம் ஏற்கனவே சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் மாலைதீவிற்கான சேவையில் ஈடுபடுவதற்கான அங்கீகாரத்தை…
மேலும்

நாடாளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை

Posted by - October 10, 2019
சம்பள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், நாடாளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்திற்கு இரண்டுவாரகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கமைய…
மேலும்

தபால் மூலம் வாக்களிக்க 7 இலட்சம் பேர் விண்ணப்பம்

Posted by - October 10, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பி.டி.சில்வா தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பங்கள் தற்பொழுது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். உரிய தகமைகள் பூர்த்தி செய்யப்படாத மற்றும் முழுமைப்படுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்…
மேலும்

நாளை புரிந்துணர்வு உடன்படிக்கை

Posted by - October 9, 2019
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நாளை (10) இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். நாளை காலை 10.10 மணிக்கு கொழும்பு மன்றக்…
மேலும்

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி நடுநிலை வகிப்பார் -பேஷல ஜயரத்ன

Posted by - October 9, 2019
ஜனாதிபதி என்ற ரீதியிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேரடியாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என்பதால் தேர்தலில் அவர் மத்தியஸ்தம் வகிக்க தீர்மானித்துள்ளதாக வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார். இதன்…
மேலும்