ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி நடுநிலை வகிப்பார் -பேஷல ஜயரத்ன

45 0

ஜனாதிபதி என்ற ரீதியிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேரடியாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது என்பதால் தேர்தலில் அவர் மத்தியஸ்தம் வகிக்க தீர்மானித்துள்ளதாக வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.

இதன் காரணமாக பேராசிரியர் றோஹண லக்ஷமன் பியதாச எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பதில் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.