பொலிசாருக்கு இலஞ்சம் கொடுத்த நபர் ஒருவர் கைது

217 0

தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் உள்ளே வைத்து பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

தம்புள்ள நீதிமன்றத்தில் நடைபெறும் ஹெரோயின் தொடர்பான வழக்கை குறுகிய காலத்தில் முடித்து கொள்ள உதவி புரியும் படி சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியிடம் கூறிய அந்த நபர் 10 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக கொடுக்க முற்பட்ட வேளையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 41 வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்புள்ளை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.