முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரக்கூட்டம் கொழும்பில்!

276 0

முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மாநாடும் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரக்கூட்டமும் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 13ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு இந்த மாநாடு இடம்பெறவுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம் பெறவுள்ள கட்சியின் முதலாவது மாநாட்டுடன் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்துத் தரப்புக்களும் தீவிரமான தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.