கடும் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும்.!

336 0

அடுத்த 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்கு கடு­மை­யான காற்­றுடன் கூடிய மழை பெய்யும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இதன் போது கடல் பகுதிகள் கொந்­த­ழிப்­பாகக் காணப்­படும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சப்­ர­க­முவ, மத்­திய, வட மேற்கு மற்றும் வடக்கு மாகா­ணங்­க­ளிலும் காலி மற்றும் மாத்­தறை ஆகிய மாவட்­டங்­க­ளிலும்  இடி­யுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக மத்­திய மாகா­ணத்தின் மலை­ய­கப்­பி­ர­தே­சங்­க­ளி­லேயே இடி­யுடன் கூடிய மழை காணப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மலையகத்தில் நேற்று காலை முதல் நிலவி வரும் சீரற்ற கால நிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப் படைந்துள்ளது.

பனி மூட்டம் நிறைந்து காணப் படுவதால் ஹட்டன், தலவாக்கலை  மற்றும் நுவரெலியா பகுதிகளுக்கு பயணிப்போர் அவதானத்துடன் செல் லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

மேலும் வங்­காள விரி­கு­டாவின் தாழ­முக்கம் கார­ண­மாக வடக்கு, கிழக்கு மற்றும் தென் கடல் பிர­தே­சங்­களில் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற் றர் வரை  காற்றின் வேகம் காணப்­ப டும். இந்த நிலைமை  எதிர்வரும் 5 நாட்­க­ளுக்கு தொடரும். எனவே இந்த பகுதி மீன­வர்கள் கட­லுக்கு செல்ல வேண்டாம் என்று எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதேவேளை, இரத்­தி­ன­புரி, கேகாலை மற்றும் காலி மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்­கையும் விடுக்­கப் பட்­டுள்­ளது.

மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை  விடுக்­கப்­பட்­டுள்ள பிர­தேச மக்கள் எச்­ச­ரிக்­கை­யுடன் இருக்க வேண்டும் எனவும் தேவையேற்படின் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை யம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a comment