திங்கட் கிழமையிலிருந்து வைத்திய வசதிகளை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!

384 0

தமது கோரிக்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட் கிழமையிலிருந்து தாம் வைத்திய வசதிகளைப் புறக்கணிக்கப்போவதாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அநுராதபுர சிறைச்சாலைக்கு பயணம் செய்து உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளை பார்வைிட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த செப்ரெம்பர் மாதம் 25ஆம் நாள் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணையை சிங்கள நீதிமன்றங்களுக்கு மாற்றக்கூடாது என வலியுஞத்தி தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாணம் தழுவிய ரீதியில் நேற்றையதினம் கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்றையதினம் அனுராதபுர சிறைச்சாலைக்கு சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் டொமினிக் பிரேமானந் ஆகியோர் பயணம் செய்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

Leave a comment