தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

12005 21

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் 3 தமிழ் அரசியல் கைதிகளுக்கும் ஆதரவு தெரிவித்தும், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியும் கிளிநொச்சி நகரின் மத்தியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வரும் அரசியல்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அவர்களுக்கு எதிரான வழக்குகள் அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.

இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் கலந்;துகொண்டு தமது முழுமையான ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.

Leave a comment