பட்டினிக் கொடுமையால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 84வது இடம்

223 0

சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள உலக நாடுகளின் பட்டினிக் கொடுமையால் வாடும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 84வது இடம் வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இதே பட்டியலில் 87வது இடத்தில் இருந்த இலங்கை, மூன்று இடங்கள் ‘முன்னேறி’ 84வது இடத்தைப் பிடித்துள்ளது.

நேபாள், மியன்மார் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளை விடப் பின்னணியில் இருந்தாலும், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு முன் இடங்களில் இலங்கை இருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்பட்டியலில் முதலிடங்களை, பெலாரஸ், பொஸ்னியா, சிலி, குரோஷியா, கியூபா, எஸ்டோனியா, குவைட், லட்வியா, லித்துவேனியா, மொன்டினிக்ரோ, ஸ்லோவாக், துருக்கி, உக்ரெய்ன், உருகுவே ஆகிய பதினான்கு நாடுகள் பகிர்ந்துகொண்டுள்ளன.

இந்நாடுகளில் உணவு வினியோகப் புள்ளி ஐந்துக்கும் குறைவாக இருப்பதாக சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

Leave a comment