வலி.வடக்கில் 460 ஏக்கர் ஒருவாரத்திற்குள் விடுவிக்கப்படும் ஜனாதிபதியின் செயலாளர் உறுதி

283 0

0420395f8b4f53820734a9e17c6f51c6வலி.வடக்கு இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மேலும் 460 ஏக்கர் காணி மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் தலமையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாலிலேயே மேற்படி காணி விடுவிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் தலமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், யாழ்.கட்டளைத்தளபதி, தெல்லிப்பளை பிரதேச செயலர், காணி திணைக்கள அதிகாரிகள் வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலர்கள் வலி.வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதி செயலாளரிடம் கேட்டிருந்தனர்.
இதற்கு வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து குறிப்பாக காங்கேசன்துறை கிழக்கு துஃ233, காங்கேசன்துறi மத்தி துஃ234, காங்கேசன்துறை மேற்கு துஃ235, பளை வீமன்காமம் துஃ236, தையிட்டி துஃ250 போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளின் உள்ள 460 ஏக்கர் காணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் விடுவிக்கப்படும்.
குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டு, அப்பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.
இதுமட்டுமல்லாமல் காங்கேசன்துறையில் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கு தடையாக அங்கு நிலை கொண்டுள்ள பொலிஸாரையும் அங்கிருந்து வெளியேற்றி உத்தியோக பூர்வமாக அப்பகுதி உரிமையாளர்களிடம் குறித்த காணிகளை கையளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
அந் நடவடிக்கைகளை மீள்குடியேற்ற அமைச்சும், காணி அமைச்சும் இணைந்து மேற்கொள்ளும். இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக குறித்த பகுதிகளை விட்டு வெளியேறுமாறு பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பிவைக்கப்படும்.
மேலும் கீரிமலையில் அமைக்கப்படும் வீட்டுத்திட்டத்தினை மழைகாலத்திற்குள் விரைவுபடுத்தி முகாங்களில் தங்கியுள்ள காணியற்றவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும் முகாங்களில் தங்கியுள்ள மக்கள் எந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் உள்ள காணிகளின் விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு குறித்த கலந்துரையாடலில் உத்தரவிடப்பட்டுள்ளது.