பேராதனை பல்கலைக்கழக தமிழ், முஸ்லீம் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல் (படங்கள்)

294 0

unnamed-1-6 பேராதனை இணைந்த சுகாதார விஞ்ஞான பீட 1ம் வருட தமிழ், முஸ்லீம் மாணவர்கள் குறிஞ்சிக் குமரன் ஆலய வழிபாடுகளை முடித்துக் கொண்டு தமது விடுதிக்கு திரும்பிச் செல்லும் போது அவர்களை வழி மறித்த 2ம் வருட சிங்கள மாணவர்கள் பொல்லுகள் மற்றும் தலைக் கவசங்களினால் தமிழ் முஸ்லீம் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இவ் தாக்குதலில் காயமுற்ற மற்றும் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் உடனடியாக( 22.08.2016 திங்கள்) மாலை 7 மணியளவில் சக மாணவிகளின் உதவியுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அனுமதிக்கப்பட்டுள்ள 12 மாணவர்களில் 2 மாணவர்களுக்கு பலத்த இரத்த காயங்கள் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

unnamed-59 unnamed-1-6