இலங்கையின் காலநிலை குறித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் அபாய எச்சரிக்கை!

452 0

இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த ஆபத்து காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

காற்றழுத்தம் வளிமண்டலத்தில் குழப்ப நிலை போன்றவைகள் எதிர்வரும் நாட்களில் ஏற்பட கூடும் எனவும் அதன் ஊடாக எந்த ஒரு நாட்களிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மழை பெய்ய கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த மாதம் இலங்கையின் வெப்ப மண்டலத்தில் அழுத்தம் ஏற்பட கூடும் என்பதனால் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment