திருத்தச்சட்ட மூலத்தில் சபாநாயகர் இன்று கையெழுத்து

348 0
உள்ளுராட்சிமன்ற தேர்தலின் பொருட்டு கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரதேசசபை, நகர சபை மற்றும் மாநகர சபை ஆகிய 3 கட்டளைச் சட்டங்களில் சபாநாகர் கருஜயசூரிய இன்று கையெழுத்திடவுள்ளார்.
சபாநாயகர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று காலை 10 மணியளவில் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் வைத்து சபாநாயகர் குறித்த ஆவணங்களில் கையெழுத்திடவுள்ளார்.
மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்த கட்டளைச் சட்டமூலங்கள் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் கடந்த 9 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டன.
இந்த கட்டளைச் சட்டங்கள் உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஃபைசர் முஸ்தப்பாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
சபாநாயகர் கையெழுத்திட்டு ஒருவார காலப்பகுதியின் பின்னர் குறித்த கட்டளைச் சட்டங்களை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நாடாளுமன்றத்தில் வைத்து கடந்த வாரம் தெரிவித்திருத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment