யாழில் வாகன விபத்து – இளைஞர் பலி

246 0

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் 17ம் கட்டைப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி, மின் கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, காயமடைந்த 19 வயதான மோட்டார் சைக்கிள் சாரதி அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a comment