தந்தையின் கொலை தொடர்பில் நீதிவிசாரணை வேண்டும் – சுவிஸில் கொல்லப்பட்ட ஈழ அகதியின் பிள்ளைகள்

451 0

சுவிட்சர்லாந்தில் அகதிகள் முகாம் ஒன்றில் வைத்து அண்மையில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பார் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கத்திகளைக் காட்டி சக அகதிகளை மிரட்டியநிலையில் அவரை காவற்துறையினர் சுட்டுக் கொண்டதாக செய்தி வெளியாக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்தின் தூதரகம், தமது வடக்கு கிழக்கு பிராந்திய அரசியல் பிரிவு அதிகாரி சுஸாந்தினி கோபாலகிருஸணனை, கொலையுண்டவரின் முல்லைத்தீவு இல்லத்துக்கு அனுப்பி துக்கம் விசாரித்துள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள தூதரகத்துக்கு மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை என்றும், சுவிஸ் அரசாங்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் குறித்த அதிகாரி குடும்பத்தாரிடம் தெரிவித்தார்.

தமது தந்தையின் விசாரணைகள் நீதியாக அமைய வேண்டும் என்பதோடு, தாங்கள் சுவிஸ் சென்று விசாரணைகளை கண்காணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கொலையுண்டவரின் பிள்ளைகள் கோரினர்.

Leave a comment