மத்திய வங்கியின் முறிமோசடி தொடர்பில் கோப் குழு விசாரணையில் வெளிப்படுத்தப்படாத பல்வேறு விடயங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் வெளியாகிவருவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
மொரகஹஹேன பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் இலங்கையின் முக்கிய அரச வங்கிகளின் உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, மத்தியவங்கியின் முறி கொடுக்கல்வாங்களின்போது மோசடிகள் இடம்பெறவில்லை என்பதை போன்று வாக்குமூலங்களை வழங்கியிருந்தனர்.
எனினும் தற்போது மத்திய வங்கியின் மோசடிகளுடன் தொடர்புபட்டுள்ளமை உறுதியாகிவருகின்றது.
இந்த நிலையில், இலங்கையின் அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, அரச அதிகாரிகளும் மோசடிக்காரர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுவருவதாக பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

