அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்ச்சியாக தோல்வி

5750 0

வடகொரியாவின் அணு திட்டங்கள் தொடர்பாக பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினையினை வேறு வழியிலேயே கையாள வேண்டியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவும் உயர்மாட்ட அதிகாரிகளும் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன.

கடந்த அமெரிக்க நிர்வாகம் இந்த விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடகொரியாவுடனான பிரச்சினையை 25 வருடங்களுக்கு முன்பே வெற்றிகரமாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரக்கூடிய நிலை இருந்தாகவும், எனும் அதனை முன்னைய நிர்வாகங்கள் மேற்கொள்ளவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

Leave a comment