உக்ரைன் அதிபருடன் அமெரிக்க துணை ஜனாதிபதி பேச்சு

371 0

201608210747487992_US-Vice-President-Joe-Biden-Ukraine-Poroshenko-discuss-surge_SECVPFகிழக்கு உக்ரைனில் போர்ப்பதற்றம் குறித்து உக்ரைன் அதிபருடன் அமெரிக்க துணை ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார்.உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதி, ரஷியாவின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது. இந்த நிலையில் ரஷிய மொழி பேசுவோரை பெரும்பான்மையினராக கொண்டுள்ள கிழக்கு உக்ரைனையும் ரஷியா தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டி வந்தது. அங்கு உக்ரைன் படைகளுக்கும், ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன.

இதற்கிடையே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் கிரிமியா சென்று வந்தார்.

இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் ரஷியா போர் ஆயத்தம் செய்துவருவதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோஷெங்கோ பரபரப்பு புகார் கூறினார். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

இது தொடர்பாக பெட்ரோ போரோஷெங்கோவுடன் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடென் தொலைபேசியில் பேசினார். அப்போது இரு தலைவர்களும் கிழக்கு உக்ரைன் நிலவரம் குறித்து விவாதித்தனர்.

“கிழக்கு உக்ரைன் நிலவரம் குறித்து உலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது, அங்கு பதற்றத்தை தணிக்க வேண்டும்” என்று அமெரிக்காவுக்கு ரஷியா கூறி உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.

உக்ரைனும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.