இலங்கையின் தகவல் அறியும் சட்டத்துக்கு உலகில் முதலிடம்- சபாநாயகர்

21854 91

இலங்கையின் தகவல் அறியும் சட்டம் உலகிலுள்ள நாடுகளில் காணப்படும் தகவல் அறியும் சட்டங்களை விடவும்  சிறந்த தகவல் அறியும் சட்டமாக  இடம்பிடித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையர் என்ற வகையில் நாம் பெருமைப்பட வேண்டும் எனவும் இதனைப் பயன்படுத்துவதை நமது பழக்கத்தில் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் எமது தகவல் அறியும் சட்டம் உலக அரங்கில் மூன்றாம் இடத்திலேயே காணப்பட்டது எனவும் சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment