கிழக்கு கடற்பரப்பில் முருங்கைக் கற்களுக்கு பாதிப்பு – மஹிந்த அமரவீர

556 0

கிழக்கு கடற்பரப்பில் முருங்கைக் கற்களுக்கு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய பாசி வகையொன்று வியாபித்து வருவதாக மீன்பிடி மற்றும் நீர்வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பாசி வகை வௌியிடும் ரசாயன என்சயிமன்கள் காரணமாக முருங்கைக் கற்கள் பழுதடைந்து பாதிப்புக்கு உள்ளாவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மீன்பிடித்துறை அமைச்சர் இடம்பெற்ற அறிவுறுத்தல் கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

குறித்த பாசி வகை படர்வது தொடர்பாக விரைவாக விஞ்ஞான ரீதியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் நாரா அமைப்புக்கும், தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபைக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் முருங்கைக் கற்பாறைகளில் பாசி வகை படர்ந்தமையை அடுத்து அவற்றை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Leave a comment