விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம்: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு 20 நாள் ஜெயில்

13344 0

சட்ட விதிமுறைகளை தொடர்ந்து மீறி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த முயற்சித்ததாக ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு 20 நாட்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்ட விதிமுறைகளை தொடர்ந்து மீறி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த முயற்சித்ததாக ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு 20 நாட்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த 1999 முதல் அதிபராக இருப்பவர் விளாடிமிர் புடின். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் புடினை எதிர்த்து முற்போக்கு கட்சித்தலைவர் அலெக்ஸி நவால்னி போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிபர் புடினின் பிறந்த நாள் அன்று அவரது சொந்த ஊரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அலெக்ஸி நவால்னி திட்டமிட்டு இருந்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே அவர் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். தொடர்ந்து சட்ட விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம், பேரணி நடத்தி சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதாக அலெக்ஸி மீது அரசுத்தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து, அவரை 20 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், புடினின் சொந்த ஊரில் அவரால் பிரச்சாரம் செய்ய முடியாமல் போனது. ‘இந்த சிறை தண்டனை அதிபர் புடினுக்கு நான் அளிக்கும் பிறந்த நாள் பரிசு’ என நீதிமன்ற வளாகத்தில் அலெக்ஸி தெரிவித்தார்.

கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் இதே போல் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக அலெக்ஸி கைது செய்யப்பட்டு தலா 15 மற்றும் 25 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment