வயிற்றில் கொக்கேனுடன் இலங்கையர் கைது

221 0

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கொக்கேன் போதைப் பொருளை வயிற்றில் மறைத்த வண்ணம் சென்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர் விசாகப் பட்டினம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9.30 அளவில் குறித்த நபர் கொழும்பு – விசாகபட்டினம் விமானத்தில் சென்றுள்ளார்.

குறித்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் நகர்ந்து சென்றதை அடுத்து சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்ட நிலையில் போதைப் பொருள் கடத்தப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

Leave a comment