இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ சபையின் தலைவராக பதவி வகித்த காலோ பொன்சேகாவின் பதவிக் காலம் நிறைவுற்றதை தொடர்ந்து ஏற்பட்டிருந்த வெற்றிடத்துக்கே சுகாதார அமைச்சினால் பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
காலோ பொன்சேகாவின் பதவிக் காலத்தை மீளவும் நீடிக்க கோரிக்கைகள் பல முன்வைக்கப்ப்ட்டிருந்த போதும், அவை தொடரெபில் கடும் வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுவந்தன.
இந் நிலையிலேயே பேராசிரியர் கொல்வின் குணரத்ன மருத்துவ சபையின் தலைமை பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றியிருந்த கொல்வின் குணரத்ன, திறந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராவார்.

