கிண்ணியாவில் கசிப்பு தயாரிப்பு நிலையம் முற்றுகை

292 0

கிண்ணியா காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட உப்பாறு பாலத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள நன்னீர் பிரதேசத்தில் நேற்று மாலை கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் ஒன்று கிண்ணியா காவல் நிலைய பொறுப்பதிகாரி விஜயசிறியின் தலைமையில் கிண்ணயா பொலிஸாரினால் முற்றுகை இடப்பட்டது.

கிண்ணியா காவல்துறை விஷேட குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக விஷேட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இச்சுற்றிவளைப்பின் போது கசிப்பு நிலையத்தை நடத்துபவர் என்ற சந்தேக நபர் தப்பிச்சென்ற நிலையில் அவ்விடத்தில் இருந்த ஐந்து கொள்கலன்களில் 1100 லீற்றர் கோடா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும் தப்பிச்சென்ற நபரை தேடும் பணி தொடர்வதாக கிண்ணியா காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Leave a comment