இலங்கையில் முதலாவது சீன வங்கி

2185 31

சீன வங்கி தமது முதலாவது கிளையை இலங்கையில் அடுத்த வருட ஆரம்பத்தில் ஸ்தாபிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே நான்காவது தரவரிசையில் உள்ள சீன வங்கிஇ இலங்கையின் வங்கி சட்டதிட்டங்களுக்கு அமைய அரசாங்கத்தின் அனுமதியை பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கான பல முழு அளவிலான சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சீன வங்கிக்கான பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிளையில் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Leave a comment