இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை அனுப்ப சுரங்கம்

411 0

ஜம்மு – காஸ்மீரில் உள்ள ஆர்னியா பகுதியில் பாகிஸ்தானிய படையினரால் தோண்டப்பட்டதாக கூறப்படும் 14 அடி நீளமான சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தீவிரவாதிகளை இரகசியமாக இந்தியாவிற்குள் அனுப்புவதற்காக தோண்டப்பட்டுள்ளதாக இந்திய படையினர் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தாக்குதல் நடத்துவதற்காக இவ்வாறு தீவிரவாதிகளை அனுப்ப முயற்சித்திருக்கலாம் என்று ஐயம் வெளியாக்கப்படுகிறது.

இந்த பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக பாகிஸ்தானிய படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் 2009 மற்றும் 2011ம் ஆண்டு ஆகிய காலப்பகுதியில் நீண்ட இரகசிய சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment