மியன்மார் அகதிகள் விடயம் – மேலும் 4 பேர் கைது

21427 221

கல்கிஸ்ஸையில் மியன்மார் அதிககள் தங்க வைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்னால் கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில்  மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22, 45, 44 மற்றும் 51 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இதுவரையில் குறித்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாக காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

8 பேர் இந்த சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களுல் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றையவர்களையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டுடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற குறித்த சம்பவம் முழுக்க முழுக்க சட்டவிரோதமானது.

இந்த சம்பவம் தனிப்பட்ட தேவைகளுக்காகவே நடத்தப்பட்டதாகவும் காவற்துறைமா அதிபர் குறிப்பிட்டார்.

 

Leave a comment