அமெரிக்க ஜனாதிபதி ஆசியாவுக்கு விஜயம்

378 0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆசியாவுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் முதலான நாடுகளில் இடம்பெறவுள்ள இரண்டு சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பதற்காக அவர் ஆசியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை 12 நாட்கள் அவரின் ஆசிய பயணம் அமையவுள்ளது.

இதன்போது அவர் ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா முதலான நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்தப் பயணத்தில்  பெண்மணி மெலனியா ட்ரம்ப்பும்  இணைந்துகொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவினால் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக சர்வதேசத்தின் பிரதிபலிப்புகள் தொடர்பான ஒத்துழைப்புகளை கட்டியெழுப்ப டொனால்ட் ட்ரம்ப் இதன்போது நடவடிக்கை எடுப்பார் என வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ட்ரம்ப் மேற்கொள்ளும் நீண்ட நாள் வெளிநாட்டுப் பயணம் இது என அமெரிக்க ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

Leave a comment