வடமத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 10 உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித்தின் இல்லத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனை அறிவித்துள்ளனர்.
எஸ்.எம். ரஞ்சித், எஸ்.பி. சேமசிங்க, கே.எச். நந்தசேன, சரத் வீரசிங்க, கே.பி.எஸ். குமாரசிறி, உபாலி விஜேகோன், கல்யாணி கரலியத்த, டி.எம்.ஆர்.சிறிபால, ஜனக்க மகேந்திர, அப்துல் உசைன் ஆகியோரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டுள்ளனர்.
அதேவேளை கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் நேற்று பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அண்மை காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துகொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கடியை ஏற்பட்டுத்தும் என அரசியல் நோக்குநர்கள் கூறியுள்ளனர்.