மலேசியர்கள் வட கொரியா செல்லத் தடை – வெளியுறவுத்துறை மந்திரி அறிவிப்பு

8426 29

வடகொரியாவில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக அங்கு செல்ல தடை விதித்து மலேசியா வெளியுறவுத்துறை மந்திரி இன்று அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகள், உலக நாடுகளின் கடும் கண்டனங்கள் என எதையும் காதில் வாங்காமல் வட கொரியா தொடர்ந்து நைட்ரஜன் வெடிகுண்டு, ஏவுகணை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலேசியா மக்கள் வட கொரியா செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மலேசியாக்கும் வடகொரியாவுக்கும் இடையே நட்புறவு இருந்தது. மலேசியா விமானநிலையத்தில் வட கொரிய பிரதமரின் சகோதரர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து மலேசிய வெளியுறவுத்துறை மந்திரி பேசுகையில், வட கொரியாவில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக மலேசியா மக்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலைமை சுமூகமானவுடன் தடை விலக்கப்படும் என கூறினார்.

வட கொரியாவின் பியோங்கியாங்கில் அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள மலேசியா அணி, வட கொரியா செல்ல உள்ளனது. இதற்கு முன் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டி இரண்டு முறை தாமதமானது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையை மீறி மலேசிய அணி வீரர்கள் வடகொரியா செல்ல அனுமதிக்கப்படுவார்களா? என்பது விரைவில் தெரியவரும்.

Leave a comment