முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா இன்று(28) உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்வதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
உள்ளுராட்சி மன்ற திருத்த சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளமை சட்டவிரோதம் என கூறியே அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

