ஹம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த துறைமுகத்தில் கடமையாற்றும் 466 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் அல்லது அவர்களை சேவையில் இருந்து நீக்கினால் நியாயமான நஸ்டஈட்டை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

