வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது

26447 169

புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது. 

இந்தநிலையில், சந்தேகநபர்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். புங்குடுத்தீவு மாணவி வித்தியா கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து, முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளுக்கு அமைய ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களில் இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனின் தலைமையிலான, ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தினால், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

Leave a comment