அமெரிக்காவின் விமானங்களை சுட்டுவீழ்த்துவது வடகொரியாவிற்கு மிகப்பெரிய சவால்

264 0

அமெரிக்காவின் விமானங்களை சுட்டுவீழ்த்துவது வடகொரியாவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று சர்வதேச நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் எச்சரிக்கையை, யுத்த அறிவிப்பாக கருதுவதாக தெரிவித்துள்ள வடகொரியா, தற்போதைய சூழ்நிலையில் வடகொரியா வான்பரப்பில் பறக்காத அமெரிக்க யுத்த விமானங்களைக் கூட தங்களால் சுட்டுவீழ்த்த முடியும் என்று எச்சரித்திருந்தது.

ஆனால் அது இலகுவான விடயம் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் யுத்த விமானங்களை வடகொரியாவின் ரேடார்களால் அவதானிக்க முடியாத நிலை காணப்படுவதாக தென்கொரியாவின் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இறுதியாக 1969ம் ஆண்டு அமெரிக்காவின் ஈசி-121 என்ற ஆயுதமற்ற விமானம் ஒன்றை வடகொரியாவின் மிக் விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தியதில் 31 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment