மியன்மார் ஏதிலிகளுக்கு இலங்கையில் அடைக்கலம் – கூட்டு எதிர்க்கட்சி கேள்வி

360 0

மியன்மாரில் இருந்து வந்த சுமார் 30 ஏதிலிகளுக்கு இலங்கையில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி இன்று கேள்வி எழுப்பியுள்ளது

கல்கிஸ்ஸை பிரதேசத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள இந்த ஏதிலிகளுக்கு பௌத்த பிக்குகள் விடுத்த அச்சுறுத்தலை அடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு நீதியமைச்சர் தலதா அத்துக்கோரளையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஏதிலிகளை அவர்களின் நாட்டுக்கு திருப்பியுனுப்ப எடுக்கப்பட்;ட நடவடிக்கைகள் குறித்தும் கூட்;டு எதிர்க்கட்சியினர் கேள்விகளை தொடுத்தனர்

இதற்கு பதிலளித்த நீதியமைச்சர் தலதா அத்துகோரளை,  சர்வதேச உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ள நாடு என்ற அடிப்படையில், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று குறிப்பிட்டார்

இதற்கிடையில் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் மியன்மார் ஏதிலிகளுக்கு அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளமையை கண்டித்து இன்று பௌத்த பிக்குமார் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல் நிலை ஏற்பட்டது.

Leave a comment