லொரி – பஸ் மோதி விபத்து: பஸ் நடத்துநர் பலி

283 0

புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் உடப்புவ சந்தியில் பஸ் வண்டியொன்று மீன் கொண்டு சென்ற லொரிஒன்றுடன் மோதியதன் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக உடப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியொன்று முன்னால் சென்ற லொரியுடன் மோதியதால் அருகிலிருந்த மரமொன்றில் மோதி குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் புத்தளம் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய தனியார் பஸ் நடத்துநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை காயமடைந்த மூவரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment