இலங்கை கடற்படையினர் கடல் எல்லை மீறலில் ஈடுபடவில்லை – இந்தியா

788 0

இலங்கை கடற்படையினர் தமிழகத்தின் தனுஷ்கோடி பிரதேசத்தில் கடல் எல்லை மீறலில் ஈடுபடவில்லையென இந்திய கரையோர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்திய கரையோர பாதுகாப்புப் படை தளபதியான ராமராவ் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் இலங்கை கடற்படையினர் கடல் எல்லைகளை தாண்டி தமிழக கடற்தொழிலாளர்கள் மீது தாக்குதல்களை நடத்திவருவதாக கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் குற்றம்சுமத்திவருகின்றனர்.

இது தொடர்பில் இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கரையோர பாதுகாப்புப் படை தளபதி ராமராவ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய கடலோர பாதுகாப்புப் படை 24 மணித்தியாலங்களும் எல்லை கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் கரையோரப் பாதுகாப்பு படைக்கும் இடையில் இணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாகவும், கடல் எல்லைகள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலான தெளிவூட்டல்கள், கடற்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுவருவதாகவும் தளபதி ராமராவ் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a comment