அடுத்தவருடம் 1200 வைத்தியர்கள் உருவாக மாட்டார்கள்- சுசில் குற்றச்சாட்டு

297 0

புதிய அரசியலமைப்பை அமைப்பதை விடவும் சைட்டம் பிரச்சினையின் மீது அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு மாதங்களாக வைத்திய பீட மாணவர்கள் 6500 பேர் விரிவுரைகளுக்கு செல்வதில்லை. இதனால் இவ்வருடத்தில் வழமையாக வெளியாகி வரும் புதிய 1200 வைத்தியர்கள் வைத்தியசாலைகளுக்கு செல்வதில்லை. இந்தப் பிரச்சினையை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும்.

அரசாங்கம் விளையாடுவது நாட்டின் எதிர்காலத்துடன். என்னுடைய தனிப்பட்ட கருத்து, நாட்டுக்கு அரசியல் யாப்பை சரிசெய்வதை விட முதன்மையளிக்கப்பட வேண்டிய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment