உத்தியோகபூர்வ ஆட்சிக்காலம் நிறைவடையும் மாகாணசபைகள் ஆளுனரின் கீழ்

272 0
உத்தியோகபூர்வ ஆட்சிக்காலம் நிறைவடையும் மாகாணசபைகள் ஆளுனரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.
இதற்கான அதிகாரக் காலம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என்று உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகள் அவற்றின் அதிகாரக் காலம் நிறைவடைந்தப் பின்னர், அந்தந்த மாகாண ஆளுனர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.
சப்ரகமுவ மாகாண சபையின் ஆட்சிக் காலம் எதிர்வரும் 27ம் திகதியுடன், வடமத்திய மாகாண சபையின் ஆட்சிக் காலம் எதிர்வரும் 30ம் திகதியுடனும் நிறைவடைகின்றன.
அண்மையில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவிருந்த 20ம் திருத்தச் சட்டத்தின் கீழ், காலாவதியாகும் மாகாண சபைகளின் அதிகாரக் காலத்தை நீடிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
அத்துடன் அனைத்து மாகாண சபைகளின் தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால் 20ம் திருத்தச் சட்டம், அரசியல் யாப்புடன் இசைந்து செல்லாத நிலையில், அதனை நிறைவேற்ற பொதுசன வாக்கெடுப்பும், அறுதிப் பெரும்பான்மையும் அவசியம் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் 20ம் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment