கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்த புதிய வேலைத்திட்டம்-ரணில்

203 0

நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சியில் அதிக பங்­க­ளிப்பை செய்யும் கிரா­மிய வியா­பா­ரம் மற்றும் பொருளாதாரத்தை பலப்­ப­டுத்த அர­சாங்கம் புதிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். அடுத்த வரவு–செலவு திட்­டத்தில் நிதி ஒதுக்­கீட்­டுக்கு முக்­கி­யத்­துவம் கொடுப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

வலு­வான பொரு­ளா­த­ாரத்தை கட்­டி­யெ­ழுப்­புதல் எனும் தொனிப்­பொ­ருளில் ஆசிய கடன் தொழிற்­சங்க மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்­பித்த நிலையில் அதில் உரை­யாற்­றிய போதே பிர­தமர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டின் வளர்ச்­சி­யிலும் அதன் பொரு­ளா­தார மேம்­பாட்­டிலும் அதன் மேல்­மட்ட வர்க்க அபி­வி­ருத்தியை மாத்­தி­ரமே கருத்­தில்­கொள்ள முடி­யாது. கடந்த காலங்­களில் நாட்டின் ஒரு குறித்த நபர்­க­ளிடம் மாத்­தி­ரமே நிதி இருந்­தது. அவர்­களின் தலை­யீட்டில் மாத்­தி­ரமே காணப்­பட்­டது. எனினும் நாம் இன்று நாட்டின் கீழ் மட்ட பொரு­ளா­தார நட­வ­டிக்­கைகளை கருத்தில் கொண்டு அதற்­கான முத­லீ­டு­களை ஊக்­கு­விக்கும் வகையில் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

கிரா­மிய பொரு­ளா­தாரம் இந்த நாட்டின் பிர­தான பங்­கினை வகிக்­கின்ற போதிலும் அதனை கருத்தில் கொண்டு நாம் செயற்­ப­டு­வ­தில்லை. எனினும் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்­சியில் இது பாரிய பங்­க­ளிப்­பினை செய்­கின்­றது. அரச துறை­யினை மாத்­திரம் கருத்தில்கொண்டு நாட்டின் பொரு­ளா­த­ாரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. அதேபோல் தனியார் துறை­யினை கருத்தில் கொண்டும் எம்மால் பொரு­ளா­தா­ரத்தை பலப்­ப­டுத்த முடி­யாது.

இந்த இரண்டு துறை­களின் இணைந்த செயற்­பா­டுகள் மூலமே நாம் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடியும். அதேபோல் வெளி­நாட்டு வேலை­வாய்ப்­பு­களை அதி­க­ரித்­தலும் அதன் மூல­மான முத­லீ­டு­களை அதி­க­ரிப்­ப­துமே அவ­சி­ய­மா­ன­தாகும். இதில் பிர­தான அங்­க­மான கிரா­மிய பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பி அதன் மூல­மாக நக­ருக்­கான அபி­வி­ருத்­தியை கையாள்­வதே எமது தேசிய அர­சாங்­கத்தின் நோக்­க­மாகும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து கிரா­மிய அபி­வி­ருத்தி திட்­டத்­தினை உறு­தி­யாக முன்­னெ­டுத்து செல்ல புதிய கொள்­கை­களை நாம் வகுத்து வரு­கிறோம். கிரா­மிய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளு­க்காக எதிர்­வரும் வரவு–செலவு திட்­டத்தில் நிதி ஒதுக்­கீடு செய்ய முக்­கி­யத்­துவம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

சணச கிரா­மிய வங்­கி­களின் மூல­மாக பொது­மக்­க­ளுக்­கான நிதி உத­வி­களை வழங்­குதல், பிர­தான வங்­கி­களில் குறைந்த வட்டி வீதத்­தி­லான கடன் உத­வி­களை பெற்­றுக்­கொ­டுத்தல் உள்­ளிட்ட வேலைத்­திட்­டங்­களை நாம் முன்­னெ­டுத்து வரு­

கின்றோம்.   நாட்டில் பிரதான மேல் தல வியாபாரத்தை பலப்படுத்தும் அதேநிலையில் மத்திய – சிறிய வியாபாரத்தையும், கிராமிய வியாபாரத்தையும் பலப் படுத்துவது பிரதானமாகும். கிராமிய அபிவிருத்தி திட்டங்கள், உற்பத்திகள் நாட்டின் வருவாயில் பாரிய உதவியினை செய்கின் றது என்றார்.

Leave a comment