சிரியாவில் 850 கிளர்ச்சியாளர்களை கொன்று குவித்த ரஷ்ய விமானப்படை

232 0

சிரியாவில் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிவரும் கிளர்ச்சியாளர்கள் 850 பேரை கடந்த 24 மணி நேரத்தில் விமானப்படை கொன்றுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக்குழுக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆயுதமேந்தி போராடி வருகின்றது. அரசுத்தரப்புக்கு ஆதரவாக ரஷ்யாவும், கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியுள்ளது.

இத்தனை ஆண்டுகள் நடைபெற்று வரும் சண்டையினால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். பல லட்சம் மக்கள் அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் இட்லிப் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 850 கிளர்ச்சியாளர்கள் வான் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிளர்ச்சிக்குழுக்களுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ ஏற்கனவே முடிவெடுத்துள்ளதால், இன்னும் சில காலத்தில் கிளர்ச்சியாளர் முற்றிலும் ஒடுக்கப்படும் நிலை அங்கு காணப்படுகிறது.

Leave a comment