முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறந்த சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை முல்லைத்தீவில் சிறப்புற நடைபெற்றது.
மாவட்டத்தின் சிறந்த சமூக சேவையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டதோடு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராசா மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

