கேப்பாபுலவு மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் 200 ஆவது நாளை எட்டியுள்ளது.
எனினும் இதுவரை மக்களுக்கு எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக முன்னெடுத்ததொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆறு மாதங்களை கடந்துள்ளது.
மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொடர்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இராணுவத்தினர் மற்றும் தமிழ் மக்கள் பிரதிநிதிகளை தாம் சந்திப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை தமது காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் மக்கள் குறிப்பிட்டனர்.
தம்மை நல்லாட்சி அரசாங்கம் என அடையாளப்படுத்துவபர்கள் மக்களுடைய சொந்த நிலத்தை விடுவிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமை வேதனை தருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

