இனவாதத்தை தூவி ஆட்சியைப் பிடிப்பதே மஹிந்த குழுவின் பணி-JVP

218 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனவாதத்தை தூண்டிவிட்டு, மீண்டும் ஆட்சியைப் பெற்றுக் கொள்ள முயற்சித்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் மற்றும் தொழிலாளர் இளைஞர் முன்னணி என்பவற்றின் வருடாந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மஹிந்த குழுவினர் மீண்டும் இனவாதத்தை பரப்புகின்றனர். இவர்களது போராட்டத்தின் பாதை இனவாதம் மட்டுமே ஆகும். இவர்களுக்கு ஊழலை நிறுத்தப் போவதாக கூறமுடியாதுள்ளது. இவர்களுக்கு சமாதானத்தைக் ஏற்படுத்துவதாக கூறமுடியாதுள்ளது. இவர்களுக்கு கூறமுடியுமான ஒரே விடயம் உள்ளது.  வடக்கில் புலிகள் தலைதூக்குவதை தடுப்பதற்கு மஹிந்தவைக் கொண்டுவர வேண்டும் என்பதே இவர்களது மகுட வாசகம்.

ஹட்டன் கொடகல, இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதா கிருஷ்ணனும் கலந்துகொண்டுள்ளார்

Leave a comment