அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – 4 பெண்கள் உட்பட 6 பேர் காயம்

523 0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் பெண்கள் 4 பேர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று முற்பகல் கடவத்தையில் இருந்து கொடகமை வரையில் பயணித்த வேன் ரக வாகனம் ஒன்று வெலிபென்ன பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.

வேன் ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Leave a comment