எதிர்கட்சி தலைவரின் வாக்குறுதியை அடுத்து பரவிப்பான்சான் போராட்டம் தற்காலிகமாக  இடைநிறுத்தம் 

338 0

unnamedஇராணுவத்தினரின்  வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்க் கோரி  கடந்த சனிக்கிழமையில் இருந்து காணி உரிமையாளர்கள் ஐந்து நாட்களாக இரவு பகலாக பல சிரமங்கள் மற்றும் இராணுவத்தினரின் இடையூறுகள் மத்தியிலும் குறித்த இடத்தில் சமைத்து உணவு உண்டு   கவனயீர்ப்புப் போராட்டத்தில்  ஈடுபட்டுவந்தனர்

இந்தநிலையில் இன்று இரண்டு மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராயா, சிறிதரன், சரவணபவன் சுமந்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் சகிதம் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறுகின்ற இடத்திற்கு  வருகைதந்த எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் மக்களுடன் உரையாடியதுடன்

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  கருணாசேன ஹெட்டியாராய்ச்சியுடனும்  தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியதனை அடுத்து  இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள நிலையில், இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது

இரண்டு வாரத்திற்குள் முடிவு எட்டப்படாவிடில் மீண்டும் தாம் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்க இருப்பதாக குறித்த மக்கள் தெரிவிக்கின்றனர்

unnamed (2)