ஆபாச பட சீடி விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

231 0

கினிக்கத்தேன பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஆபாச பட இறுவெட்டுக்களை விற்பனை செய்துவந்த 3 பேரை ஹட்டன் குற்ற தடுப்பு பொலிஸார் ​நேற்று கைது செய்துள்ளனர்.

மோலும் அவர்களிடமிருந்து 270 ஆபாச பட இறுவெட்டுக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச பட இறுவெட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு வர்த்தக நிலையங்களிலிருந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இறுவெட்டு ஒன்று 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரையும் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment