பொரலந்தை பொலிஸ் பயிற்சி நிலையத்தில், கடமையாற்றிய கான்ஸ்டபில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அம்பாறை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இவர், தனக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தியே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

